Thursday, September 19, 2013

Haiku in English - The First 100 Years- an interesting reading

A.Thiagarajan



Picture

ஆங்கிலத்தில் ஹைக்கூ- முதல் நூறு ஆண்டுகள்- என்று ஒரு தொகுப்பு வெளியாகியுள்ளது. ஜிம் காசியன், பிலிப் ரோலந்த் மற்றும் அல்லன்  பன்ஸ் ஆகிய மூவரும் தொகுத்துள்ள இந்த நூல் 800 
ஹைக்கூக்களைக்  கொண்டுள்ளது.   5-7-5 என்ற மரபை சிலர் கடை பிடித்தும், பலர் அந்த மரபு ஒரு தவறான கணிப்பின் அடிப்படையில் ஆனது என்று கொண்டு அதனைக் கடைபிடிக்காமல், சில சமயங்களில் அதை விட குறைந்தும் அல்லது கூடுதலாகவும்  கையாண்டு ஹைகூக்களை எழுதியுள்ளனர்.  

நீலமான மாலையிருள் 
இந்த மணல் மேடுகளை 
பனிமேடுகளாக்குகின்றது   

- ஜெப்ரி வின்கே 
------------------
காலியான பந்தாட்ட மைதானம் -
ஒரு ராபின் பறவை 
அந்த பெஞ்சை ஒட்டி தத்தி தத்திச்  செல்கிறது 

ஜாக் கேருவாக் 

-----------------
அந்திமாலை நிழல்கள் 
ஒரு குழந்தையின் உருவம் 
வீதியோர சுண்ணாம்புக் குவியலில் 

மார்க் ப்ரூக்ஸ் 
---------------
இந்த குன்றுகளுக்கு 

சொல்வதற்கு ஒன்றுமில்லை 

அதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன 

- கென் ஜோன்ஸ்
------------

எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே மழை-
குடைகளிலிருந்து
பட்டு மணத்தை வெளியே கொண்டுவர 

ரிச்சர்ட் ரைட்   
--